Wednesday, October 5, 2016

பேராசிரியர் பணி : டி.ஆர்.பி., அறிவுரை

அரசு இன்ஜி., கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்து, புகைப்படம் இணைக்காதோர், நாளைக்குள் புகைப்படம் இணைக்க வேண்டும்
. தமிழகத்தில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், 192 உதவி பேராசிரியர் பணி இடங்களுக்கு, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மூலம், ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இதற்கான விண்ணப்பங்கள், செப்.,7 வரை பெறப்பட்டன. விண்ணப்பங்களில், புகைப்படம் இணைக்காமல் தாக்கல் செய்தோரின் பட்டியல், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இணையதளத்தில் இணைக்கப்பட்டு உள்ள விண்ணப்பத்தை, பதிவிறக்கம் செய்து, புகைப்படம் ஒட்டி, அத்தாட்சி பெற்ற, அரசு அதிகாரியின் கையெழுத்துடன், நாளைக்குள் அனுப்ப அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment