Wednesday, July 11, 2018

PGTRB -முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகளில் குளறுபடி..!

தமிழகத்தில் வெளியான முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்காண தேர்வில் 45 மதிப்பெண் பெற்ற மாணவி ஒருவரை, 81 மதிப்பெண் பெற்றதாக கூறி பணிக்கு தேர்வு செய்து முறைகேடு நடந்திருப்பதாக சர்ச்சைஉருவாகி உள்ளது.

தேர்வு முடிவு வெளியிடப்பட்டதில் ஏற்பட்ட குளறுபடி தமிழகத்தில் பாலிடெக்னிக் விரிவுரையாளர்களுக்கான தேர்வில் நிகழ்ந்த முறைகேடு வெளிச்சத்துக்கு வந்ததால் அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு அதிக மதிப்பெண் பெற்றதாக கூறி தவறாக தேர்வு முடிவுகளை வெளியிட்ட மோசடி தொடர்பாக இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை 1ந்தேதி நடந்த 3375 காலிபணியிடங்களுக்காண முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11 ந்தேதி தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தற்போது வெளியிடப்பட்ட தகுதி பட்டியல் மூலம் முறைகேடு வெளிச்சத்திற்கு வந்திருப்பதாக கூறப்படுகின்றது.
இந்த தேர்வில் கணித பிரிவில் பங்கேற்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டின் கீழ் தேர்வு எழுதிய ஹேமாலட்சுமி 45 மதிப்பெண்கள் பெற்றதாகவும் அவர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு கலந்து கொள்ளும் தகுதியை கூட பெற வில்லை என்றும் ஆன்லைனில் குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த நிலையில் மெரிட் அடைப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்களின் பெயர் பட்டியலில் 45 மதிப்பெண் பெற்ற ஹேமாலட்சுமியின் பெயர் முதலாவதாக இடம் பெற்று இருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுவும் 45 மதிப்பெண் மட்டுமே பெற்ற ஹேமாலட்சுமி தேர்வில் 81 மதிப்பெண்கள் பெற்று தேர்வாகி இருப்பதாக குறிப்பிட்டுஇருப்பதை பார்த்த மற்ற தேர்வர்கள், பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் முறைகேடுநடந்திருப்பதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.
பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வில் எந்த தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு தேர்வு தாள் திருத்தும் பொறுப்பை வழங்கி இருந்தனரோ அதே தனியார் நிறுவனத்திடம் தான் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு தாளை திருத்தும் பொறுப்பையும் ஒப்படைத்ததால் இந்த முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே இனி தனியாரிடம் தேர்வு தாள் திருத்தும் பணியை ஒப்படைக்க கூடாது என்கின்றனர் கல்வியாளர்கள்.
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஜெயந்தி, இதில் முறைகேடு ஏதும் நடக்கவில்லை என்றும், தேர்வு முடிவுகளை வெளியிடும் போது ஏற்பட்ட குளறுபடியால் வேறு ஒரு மாணவியின் மதிப்பெண் தவறுதலாக வெளியானதாகவும், 81 மதிப்பெண்களுக்கு சொந்தகாரர் பொதுப்பிரிவில் தேர்வு எழுதிய டெல்லிராணி என்றும் அவருக்கு தான் மெரிட் அடிப்படையில் பணி வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.ஆனால் பொதுப்பிரிவு மாணவர்கள் பணியில் சேரவேண்டுமானால் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும் என்ற விதி இருக்க 81 மதிப்பெண்கள் மட்டுமே பெற்ற பொதுப்பிரிவு மாணவி டெல்லி ராணி எந்த அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்பட்டார் என்று தேர்வர்கள் கேள்விஎழுப்பி உள்ளனர்.

2 comments:

  1. 20 லட்சம் பேர் போட்டி தேர்வுகள் எழுதுகிறோம். அரசு எங்களிடம் கட்டணக் கொள்ளை அடிக்கிறது. வேலையும் தருவதில்லை. தேர்வு மையங்களையும் தூரத்தில் வைத்து யாரோ செய்த தவறுக்கு ஒட்டுமொத்தமாக எங்கள் அத்தனை பேரையும் அலைகழிப்பது சரியா? வழக்கு தொடுக்க வசதியில்லை. கேட்பார் இல்லாத அனாதைகளா படித்த இளையர்கள்?

    ReplyDelete
  2. பணம் கொடுத்தவனுக்கு பணமும் போச்சு. இனி வேலைக்கும் எப்பவும் விண்ணப்பிக்க முடியாது.நேர்மையானவர்களை கண்டறிய வழி தெறியவில்லை எனில் உஙளுக்கு எதற்கு அரசு ஊழியர் பணி?

    ReplyDelete