Monday, February 15, 2016

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் காலி பணியிட விபரம் வெளியீடுபிப்ரவரி

தமிழகத்தில் செயல்படும் அரசு பள்ளிகளில், காலியாக உள்ள, 2,125 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள், விரைவில் நிரப்பப்பட உள்ளன.

கடந்த, 2015 மே, 31ம் தேதி நிலவரப்படி ஓய்வு பெறும் அனைத்து வகை முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம், 3,025 என, உத்தேசமாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில், 2,125 பணியிடங்கள், 50 சதவீதம் பதவி உயர்வு வாயிலாகவும், 50 சதவீதம் ஆசிரியர் தேர்வு வாரியலாகவும் நேரடியாகவும் நியமனம் செய்ய கூறப்பட்டுள்ளது.
அதன்படி, பதவி உயர்வு கலந்தாய்வின் மூலம் 1,063 இடங்களும், 1,062 இடங்கள் நேரடி நியமனத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்விடங்களை விதிகளுக்கு உட்பட்டு நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் நேரடி நியமனத்திற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment