Tuesday, June 7, 2016

பட்டதாரி ஆசிரியரின் பணி நியமனம் ரத்து

பி.ஏ.,ஆங்கிலம் மற்றும் தொடர்பியல் படித்த பட்டதாரி ஆசிரியரின் பணி நியமனத்தை ரத்து செய்த டி.ஆர்.பி.தலைவரின் உத்தரவிற்குஉயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்தது.

திருச்சி மணப்பாறை ஜென்சி ஏஞ்சல் தாக்கல் செய்த மனு: இடைநிலை ஆசிரியர் பயிற்சி,பி.ஏ.,ஆங்கிலம் மற்றும் தொடர்பியல்பி.எட்.தேர்ச்சி பெற்றுள்ளேன். 2012ல் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி அடைந்தேன். பட்டதாரி ஆசிரியர்களாக தேர்வானவர்களின் தற்காலிக பட்டியல் வெளியானது. 
அதில்எனது பெயர் இடம் பெறவில்லை.ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் கேட்டபோது, &'பி.ஏ.,ஆங்கிலம் மற்றும் தொடர்பியலானது பி.ஏ.,ஆங்கிலத்திற்கு இணையானது அல்ல,&' என்றனர்.உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன்.தனி நீதிபதி, &'பிளஸ் 2 முடித்தவர்கள் நேரடியாக படிக்கும் எம்.ஏ.,ஆங்கிலம் மற்றும் தொடர்பியல் பட்டமானதுஎம்.ஏ.,ஆங்கிலத்திற்கு இணையானது எனவும்இதில் தேர்ச்சி அடைந்தவர்கள் அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 
ஆனால்பி.ஏ.,ஆங்கிலம் மற்றும் தொடர்பியல்பி.ஏ.,ஆங்கிலத்திற்கு இணையானதாஎன அரசு உத்தரவில் தெளிவுபடுத்தவில்லை. பி.ஏ.,ஆங்கிலம் மற்றும் தொடர்பியல் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்களாஎன்பதையும் தெளிவுபடுத்தவில்லை. இதை உயர்கல்வித்துறை தெளிவுபடுத்த வேண்டும்&' என 2013 ஜன.,21 ல் உத்தரவிட்டார்.
திருச்சி டி.சுக்காம்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில்ஆங்கில பட்டதாரி ஆசிரியராக 2013 நவம்பரில் நியமிக்கப்பட்டேன். தனி நீதிபதி உத்தரவை எதிர்த்துஉயர்நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால்அம்மனுவை ஏற்றுக்கொண்டதற்கான பிரதான எண் வழங்கப்படவில்லை. தனி நீதிபதி உத்தரவு அடிப்படையில்அரசு எவ்வித முடிவும் எடுக்கவில்லை. என்னை பணி நியமனம் செய்த உத்தரவை ரத்து செய்துஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் (டி.ஆர்.பி.,) 2016 மே 24 ல் உத்தரவிட்டார். அதை ரத்து செய்ய வேண்டும்.
தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறுஜென்சி ஏஞ்சல் மனு செய்திருந்தார். மனுதாரர் வழக்கறிஞர் சண்முகராஜா சேதுபதி ஆஜரானார்.விசாரித்த நீதிபதி டி.ராஜாபணி நியமனத்தை ரத்து செய்த உத்தரவிற்கு தடை விதித்தார். உயர்கல்வித்துறை முதன்மைச் செயலர்டி.ஆர்.பி.,தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment