Saturday, July 16, 2016

கல்வித்துறை பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை!

அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனங்கள் மற்றும் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பம் விநியோகம் செய்யப்படுகிறது.
சென்னை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் கீழ் இயங்கும் அனை
த்து மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனங்கள் மற்றும் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் காலியாக உள்ள முதுநிலை விரிவுரையாளர்,விரிவுரையாளர்இளம் விரிவுரையாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இப்பணியிடங்களுக்கான போட்டி எழுத்து தேர்வு வரும் செப்., 17 ம் தேதி நடக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள கல்வி தகுதிகள் மற்றும் இதர தகுதிகள் பெற்றவர்கள்இம்மாதம் 15ம் தேதி முதல் 30ம் தேதி வரை (விடுமுறை தினங்கள் தவிர) விழுப்புரம் சி.இ.ஓ.அலுவலகத்தில் ரூ.50 கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம்.
காலி பணியிடத்தில் சேர்வதற்கான பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 30ம் தேதி மாலை 5:30மணிக்குள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
ஒப்புகை முத்திரை 
விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கும் போதுபூர்த்தி செய்த விண்ணப்பத்தினை நகல் எடுத்துஅதில் ஒப்புகை முத்திரையினை பெற்று செல்ல வேண்டும் என சி.இ.ஓ.மார்ஸ் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment