Saturday, September 24, 2016

TRB EXAM:வினாத்தாள் 'லீக்' - பெண் மீது வழக்கு

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில், 'வாட்ஸ் ஆப்'பில் வினாத்தாள் வெளியான சம்பவத்தில், தேனியைச் சேர்ந்த பெண் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
ஆசிரியர் பயிற்சி விரிவுரையாளர்களுக்கான போட்டித் தேர்வு, செப்., 16ல், மதுரை உட்பட, ஐந்து மாவட்ட மையங்களில் நடந்தது.
மதுரை தனியார் பள்ளி மையத்தில் தேர்வு எழுதிய, தேனியைச் சேர்ந்த பெண், வினாத்தாள் பக்கங்களை மொபைலில் படம் எடுத்து, வாட்ஸ் ஆப்பில்அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. தேர்வு அறை கண்காணிப்பாளர் புகாரை அடுத்து, அப்பெண் மீது, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ், போலீசார் நேற்று வழக்குபதிவு செய்தனர். மதுரை முதன்மை கல்வி அலுவலகத்தில், அப்பெண்ணிடம், மூன்று மணி நேரம் விசாரணை நடந்தது.

No comments:

Post a Comment